#5783

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹ…

#5784

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் தமது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின் றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். அ…

#5785

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவசரத்து டன் எழுந்து தமது ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் (பள்ளிவாசலில் இருந்து…

#5786

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டுவைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூத…

#5787

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :…

#5788

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தமது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.7 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :…

#5789

‘நபி (ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல்காசிம் (ஸல்) அவர்கள்’ கூறி னார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் (தமக் குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அவர…

#5790

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் தமது கீழங்கியை (தற்பெருமையுடன் தரை யில்) இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும்படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தமது உ…

#5791

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்றுகொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்க…

#5792

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்க, நான் (அங்கு) அமர்ந் திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் வந்த…

#5793

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ....பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மேல்துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டார்கள். பிறகு நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர, நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் …

#5794

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று ஒரு மனிதர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்ராம் கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அண…

#5795

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்டபிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார் கள். அவ்வாறே அ…

#5796

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது அவருடைய புதல்வர் (அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லா…

#5797

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும் பாலான நீளங்கிகள் அணிந்த இரு மனிதர்களின்…

#5798

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர் களை எதிர்கொண்டேன். பிறகு அங்கத் தூய்மை (உளூ) ச…

#5799

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தேன். உடன…

#5800

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரம…

#5801

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து…

#5802

சுலைமான் பின் தர்கான் அத்- தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள்மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. அத்தியாயம் :…

#5803

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(முழுநீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், ம…

#5804

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இஹ்ராம் கட்டியவர்களில்) கீழங்கி கிடைக்காதவர் முழுக்கால் சட்டை அணிந்துகொள்ளட்டும்; காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை (மோஸாக் களை) அணிந்துகொள்ளட்டும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி…

#5805

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் போது எந்த ஆடையை அணிய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,…

#5806

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஹ்ராம் கட்டியவர் சட்டை அணியமாட்டார்; தலைப்பாகையையும் முழுக்கால் சட்டையையும் முக்காடுள்ள மேலங்கியையும் அணியமாட்டார். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்க…

#5807

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவிலிருந்த) முஸ்லிம்களில் சிலர் அபிசீனியாவுக்குப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமானார்கள். அப்போது நபி (ஸல்…

#5808

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தவாறு மக்கா வினுள் நுழைந்தார்கள்.29 அத்தியாயம் :…

#5809

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ‘நஜ்ரான்’ நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்களைக் கிராமவாசி…

#5810

அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டுவந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்று சொன்னார்” என சஹ்ல் …

#5811

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் நிலவு பிரகாசிப்பதுபோல் முகங்கள் பிரகாசித்தவாறு சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.…

#5812

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(பருத்தி யாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள். அத்த…

#5813

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது. அத்தியாயம் :…

#5814

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தி யாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவ…

#5816

ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக்கொ…

#5817

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) சலாம் …

#5818

அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றை யும் எடுத்துக்காட்டி, ‘‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர்…

#5819

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘முலாமசா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபார முறைகளுக்குத் தடை விதித்தார்கள்.37 ஃபஜ்ருக்குப் பிறகு சூரியன் உயரும்வரை தொழுவது, அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும்வரை தொழுவது…

#5820

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். வியாபாரத்தில் ‘முலாமசா’ மற்றும் ‘முனாபஃதா’ ஆகிய முறைகளைத் தடை செய்த…

#5821

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு விதமாக ஆடை அணிவதைத் தடை செய்தார்கள். மர்ம உறுப்பு வெளியே தெரியும்படி ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த் திக்கொண்டு அமர்…

#5822

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டு விடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முது…

#5823

உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்புநிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போக…

#5824

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள், ‘‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனது வாயிலிடுவ…

#5825

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள…

#5826

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நான் நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் …

#5827

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டி ருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘‘லா இலாஹ இல்லல்லாஹ்…

#5828

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸ…

#5829

அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஆதர் பைஜானில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு, ‘‘நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. மேலும், (அந்த அளவை விவரிக்கும் வகையி…

#5830

அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந் தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘இம்மையில் (ஆண்கள்) …

#5831

அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) மதாயின் (தைஃபூன்) நகரில் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (அக்னி ஆராதனையாளரான) ஊர்த் தலைவர் ஒ…

#5832

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்க லானார்கள். உடனே நான், ‘‘நபி (ஸல்) அவர்களிடம…

#5833

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் ‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘(ஆண் களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்று சொன்னா…

#5834

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்” என்று கூறியதாக உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். இந்த ஹதீஸ் இரு…

#5835

இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பட்(டா)டை குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி…

#5836

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டாடை யொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் அதைத் தொட்டு அதன் (மென்மை மற்றும் தரம்) காரணமாக வியக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதைக் கண்டு நீங்கள் வியக…

#5837

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்காரப் பட்டையும் அணிய வேண்டாமென்றும்,…

#5838

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையும் (‘மீஸரா), ‘கஸ்’ வகைப் பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள். அத்தியாயம் :…

#5839

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த சொறிசிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் நபி (ஸல்) அவர்கள்…

#5840

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக்குறியை நான் கண்டேன். ஆகவே, அதை…

#5841

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வ…

#5842

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியார் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள்59 கோடுகள் போட்ட பட்டு சால்வையொன்றை அணிந்திருந்ததை நான் கண்டேன். அத்தியாயம் :…

#5843

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்களுக்கெதிராக (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகை யில்) கூடிப்பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்?” என உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டுமென ஓராண்டு காலமாக நான் (நி…

#5844

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனை கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட கருவூலங்கள்…

#5845

உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப் பட்டன. அவற்றில் கறுப்புநிறக் கம்பளி ஆடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணி விப்போம் என்ற…

#5846

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆண்கள் (தமது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.65 அத்தியாயம் :…

#5847

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘இஹ்ராம்’ கட்டியவர் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.66 அத்தியாயம் :…

#5848

(பராஉ ர) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவுமில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தார்கள். சிவப்புநிற அங்கி ஒன்றில் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். (அந்த ஆடையில்) நபி (ஸல்) அவ…

#5849

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோயாளியை நலம் விசாரிப்பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்கமுகல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கரு…

#5850

சயீத் அபூமஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘ஆம் (தொழுதுவந்தார்கள்)” என்று சொன்னார்கள்.69 அத்தியாயம் :…

#5851

உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த் தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்க வில்லை” என்று கூறி…

#5852

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘‘(இஹ்ர…

#5853

நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (இஹ்ராமின்போது) கீழங்கி இல்லாத வர் முழுக்கால் சட்டை அணிந்துகொள் ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்துகொள்ளட்டும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்…

#5854

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும், தலைவாரிக் கொள்ளும்போதும், காலணி அணிந்துகொள்ளும்போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.73 அத்தியாயம் :…

#5855

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது கால் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதல் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் …

#5856

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள். அத்தியாயம் :…

#5857

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன. அத்தியாயம் :…

#5858

ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரு காலணி களை எங்களுக்குக் காட்டினார்கள். (பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘இதுதான் நபி (…

#5859

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்புக் கூடாரத் தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்த தண்ணீரை எடுத்த…

#5860

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப் பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டி னார்கள்.76 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :…

#5861

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத் தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழு வார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன்மீது அமர் வார்கள். மக்கள் நபி (ஸ…

#5862

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டி ருப்பதாகவும் …

#5863

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பொன் மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப் பட்டு, அலங்காரப் பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய …

#5864

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரத்தை அணிய வேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :…

#5865

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். (…

#5866

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பொன் மோதிரம்’ அல்லது ‘வெள்ளி மோதிரம்’ ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்து…

#5867

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டிருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். …

#5868

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றை நான் கண்டேன். பிறகு மக்கள், (அதைப் போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின…

#5869

ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் ப…

#5870

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :…

#5871

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள)வே வந்துள்ளேன்” என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றுகொண்…

#5872

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர்களான (கிழக்கு ரோம் நாட்டைச் சேர்ந்த) ‘ஒரு குழுவினருக்கு’ அல்லது ‘மக்களில் சிலருக்கு’க் கடிதம் எழுத விரும்பினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம்…

#5873

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அது (அவர் களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இரு…

#5874

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். ஆகவே, அதைப் போன்று வேறெவரும் இல…

#5875

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) கிழக்கு ரோமானியருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், ‘‘தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமானியர் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்…

#5876

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தமது உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொண்டார்கள். மக்களும் (அவ்வாறே) பொன் மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில்…

#5877

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், ‘‘நான் வெள்ளி மோத…

#5878

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது, அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று…

#5879

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களது வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூபக்ரின்) கரத்தில் இருந்தது. அபூபக்ர் (ரலி)…

#5880

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இ…

#5881

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டுவந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை. பிறகு பெண்களிடம் வந்து தர்மம…

#5882

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் …

#5883

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நோன்புப்) பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். அதற்கு முன்பும் சரி; அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுட…

#5884

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) செ…

#5885

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும் சபித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்ப…

#5886

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண் களையும் சபித்தார்கள். மேலும், ‘‘அவர் க(ளில் அரவானிக)ளை உங்கள் வீடுகள…

#5887

(நபியவர்களுடைய துணைவி யார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணு மல்லாத) அரவானி ஒருவர் இருந்தபோது நபி (ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அரவானி, என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அ…

#5888

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :…

#5889

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடி களை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்…

#5890

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியவை இயற்கை மரபு களில் அடங்கும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :…

#5891

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்துகொள்வதற்காகச் சவரக்கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்…

#5892

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூற…

#5893

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :…

#5894

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்…

#5895

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமது நரைமுடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகின்ற அளவுக்கு நரைக…

#5896

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு சலமா ஒர…

#5897

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முடிகளிலிருந்து சாயமிடப்பட்ட ஒரு முடியை எங்களிடம் எடுத்துக் காட்டினார்கள். அத்தியாயம் …

#5898

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிவப்பான முடியை எனக்குக் காட்டினார்கள்.100 அத்தியாயம் :…

#5899

நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: யூதர்களும் கிறித்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறுசெய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.102 இந்த ஹதீஸ் …

#5900

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு அதிக உயரமானவர்களாக வும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடைய வர்களாகவும் இல்லை; மாநிறம் கொண…

#5901

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: சிவப்புநிற ஆடையில் நபி (ஸல்) அவர்களைவிட அழகானவராக வேறெ வரையும் நான் பார்க்கவில்லை. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: மாலிக் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து என் தோழர்களில் …

#5902

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோ…

#5903

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அவர்களது தோள்களில் பட்டுக் கொண்டிருந்தது. அத்தியாயம் :…

#5904

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. அத்தியாயம் :…

#5905

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (தலை)முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (தலை)முடி அலையலையானதாக இருந்தது. படிந்த…

#5906

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகள் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களைப்போல் (வேறு யாரையும்) நான் பார்க்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அலையலை யானதாக இருந்தது. படிந்ததாகவ…

#5907

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார் கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போல் (வேறு யாரையும்) பார்க்க…

#5909

அனஸ் பின் மாலிக் (ரலி), அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த பாதங்களை உடையவர்களாகவும் அழகிய முகம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போல் (வேறெவரையும்) நான் பார்க்…

#5910

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உறுதியான பாதங்களும் (உறுதியான) உள்ளங்கைகளும் உடையவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :…

#5912

அனஸ் (ரலி), அல்லது ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த உள்ளங்கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களைப் போன்றவர் எவரையும் நான் பார்க்கவில்லை. அத…

#5913

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், ‘‘அவனுடைய இரு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என …

#5914

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், ‘‘(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலைமுடியை) மழித்துக்கொள்ளட்டும். (சடை வளர்ப்ப தன் மூலம்) களிம்பு தடவித் தலை முடியைப் படிய…

#5915

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, ‘‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த …

#5916

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து இன்னும் விடுபடாமலிர…

#5917

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், எந்த விஷயங் களில் தமக்கு (இறைக்)கட்டளை ஏதும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பிவந்தார்கள். வேதக்காரர்கள் தங்களது தலைமுடியை (வ…

#5918

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டி யிருந்தபோது அவர்களின் தலை வகிடு களில் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த…

#5919

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) …

#5920

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக்கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் ஹஃப்…

#5921

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்து விட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டுவிடுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :…

#5922

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான் அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்ட போதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ்…

#5923

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றி லேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவுக்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவ…

#5924

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். (அவர் எட்டி…

#5925

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன். ... இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்து…

#5926

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்ப மானதாக இருந்தது.114 அத்தியாயம்…

#5927

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ் கூறுகின்றான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பும் அளவுக்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். …

#5928

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிட மிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116 அத்தியாயம் :…

#5929

ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள் வார்கள். மேலும், அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக…

#5930

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரு கைகளால் அவர்களுக்கு (‘தரீரா’ எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன். இந…

#5931

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப…

#5932

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடையின் மீது நின்று கொண்டு (மெய்க்)காவலர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முட…

#5933

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணை யிலிருந்து அப்புறப்ப…

#5934

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டுமுடி வைக்க விரும்பி நபி (ஸல்) அவர…

#5935

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது…

#5936

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத் தட்டும்’ என்று) சபித்தார்கள். அத்தியாயம் :…

#5937

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்…

#5938

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘‘இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் ச…

#5939

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பச்சை குத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக்கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பி…

#5940

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள். அத்தியாயம் :…

#5941

அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன். அவளது த…

#5942

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அத்தியாயம் :…

#5943

அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தி லுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்…

#5944

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மை தான்” என்று சொன்னார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.129 ...இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்…

#5944

…

#5945

அவ்ன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் குருதிஉறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவருடைய குருதிஉறிஞ்சு கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டேன். அப்போது அவர்கள் க…

#5946

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள…

#5947

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள். அத்தியாயம் :…

#5948

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப்பிரித்துக்கொள்ளும் பெண்கள…

#5949

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (சிலைகள் முதலான) உருவப் படங்களும் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர் கள் நுழையமாட்டார்கள்.132 இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்…

#5950

முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யசார் பின் நுமைர் (ரஹ்) அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது யசார் (ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை …

#5951

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப் படுவார்கள். அவர்களிடம், ‘‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)” என (இடித்து)க் கூறப்படும். இதை அப்துல்லா…

#5952

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. அத்தியாயம் :…

#5953

அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல்தளத்தில் உருவப்படங்களை வரைபவர் ஒருவர் உருவங்களை வரைந்துகொண்டிருந்தார். அப்போது அபூஹு…

#5954

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச்சித்திரங்கள் பொறித்த எனது திரைச்சீலை ஒன்றால் நான் எனது அலமாரியை மறைத்திருந்த…

#5955

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்கவிட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அதைக் க…

#5956

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:) நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (அள்ளி, ஒன்றாகக்) குளித்துவந்தோம். அத்தியாயம் :…

#5957

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (உயிரினங்களின்) உருவப்படங் கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி (ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், ‘‘நான் செய்…

#5958

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்க…

#5959

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச்சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள…

#5960

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரது வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி (…

#5961

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள்…

#5962

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கி னேன். (அவருடைய குருதிஉறிஞ்சு கருவிகளை உடைத்துவிட்டேன். ஏனெ னில்,) நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசை…

#5963

நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி டம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்கம்) கேட்கப் படாத வரை நபி (ஸல்) அவர்கள்…

#5964

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்…

#5965

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம், அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்களில்)…

#5966

அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இக்ரிமா (ரஹ்) அவர்கள் முன்னிலையில், ‘‘(ஊர்திப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக் கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?” என்பது குறித்துப் பேசப்பட்டது. அப்போது…

#5967

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஊர்தியில்) இருந்து கொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்து டன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்த…

#5968

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா (ரலி) அவர்கள் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (ஊர்தியில்) அமர்ந்…

#5969

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கால்களில் ஒன்றை மற்றொன்றின்மீது தூக்கிவைத்தவர்களாகப் பள்ளிவாசலில் (மல்லாந்து) படுத்திருப்பதை நான் பார்த்தேன்.143 அத்தியாயம் :…