அரபு உரை
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ، قَالَ كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ لَهُ أَبُو مُوسَى أَرَأَيْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدْ، مَاءً كَيْفَ يَصْنَعُ فَقَالَ عَبْدُ اللَّهِ لاَ يُصَلِّي حَتَّى يَجِدَ الْمَاءَ. فَقَالَ أَبُو مُوسَى فَكَيْفَ تَصْنَعُ بِقَوْلِ عَمَّارٍ حِينَ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " كَانَ يَكْفِيكَ " قَالَ أَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِذَلِكَ. فَقَالَ أَبُو مُوسَى فَدَعْنَا مِنْ قَوْلِ عَمَّارٍ، كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ فَمَا دَرَى عَبْدُ اللَّهِ مَا يَقُولُ فَقَالَ إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَى أَحَدِهِمُ الْمَاءُ أَنْ يَدَعَهُ وَيَتَيَمَّمَ. فَقُلْتُ لِشَقِيقٍ فَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ لِهَذَا قَالَ نَعَمْ.
மொழிபெயர்ப்பு
ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோர் அருகில் நான் இருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மானே! பெருந்துடக்கு ஏற்பட்ட ஒருவருக்கு (குளிக்க) தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “தண்ணீர் கிடைக்கும்வரை அவர் தொழ வேண்டியதில்லை” என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூமூசா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம் ‘(தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்திருந்தால்) உமக்குப் போதுமானதாக இருந்திருக்கும்’ என்று சொன்னதாக அம்மார் (ரலி) அவர்கள் கூறிய செய்தியை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மார் (ரலி) அவர்கள் அச்செய்தியைத் தம்மிடம் கூறியபோது உமர் (ரலி) அவர்கள் அதைக் கேட்டு மனநிறைவு அடையவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “அம்மாரின் சொல்லை விடுங்கள். (“உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது, சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” எனும்) இந்த (5:6) இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும், பெருந்துடக்குடையவர் தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்துகொள்ளலாம்’ எனும்) இவ்விஷயத்தில் மக்களுக்கு நாம் சலுகையளித்தால், யாருக்காவது தண்ணீர் குளிராகத் தெரிந்தால்கூட அங்கத் தூய்மை செய்வதை விட்டுவிட்டு ‘தயம்மும்’ செய்யத் தொடங்கிவிடுவார்கள்” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்படியானால் “(மக்கள் குளிருக்காக ‘தயம்மும்’ செய்துவிடுவார்கள் எனும்) இந்தக் காரணத்தை முன்னிட்டுத்தான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அந்தச் சலுகையை வழங்க) வெறுத்தார்கள் என்கிறீர்களா?” என்று ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (அதற்காகத்தான் வெறுத்தார்கள்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :