#3649

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார்மீது படை யெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், “உங்களிடையே அல்லாஹ்வின…

#3650

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுற…

#3651

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர் ஒரு சமுதாயத்தார்…

#3652

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிட மிருந்து பதின்மூன்று திர்ஹங்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிபி டம், “(…

#3653

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், “(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்…

#3654

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -…

#3655

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூபக்ர் (ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் பின் …

#3656

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்பத்திலும் துன்பத்த…

#3657

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூபக்ர் அவர்களையே) ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்க…

#3658

அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கூஃபாவாசிகள்17 இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “நான் இந…

#3659

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடு வதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, “நான் வ…

#3660

ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண் களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண…

#3661

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவுக்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். …

#3662

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' எனும் போருக்கான21 படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மக்களிலேயே உங்களுக்கு மிகப் ப…

#3663

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின்மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விக்கொண்டு சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநா…

#3664

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூகுஹாஃபாவ…

#3665

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான்” என்று அல்லாஹ…

#3666

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாயில்களில் (ஒவ்வொன்றில்) இருந்து “அல்லாஹ்வின் அடியாரே! இது சி…

#3668

…

#3670

…

#3671

முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:30 நான் என் தந்தை (அலீ (ரலி) அவர்கள்) இடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபூபக்ர் (ரலி) அவர்கள்”…

#3672

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம்.31 நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' எனுமிடத்தை -அல்லது “தாத்துல் ஜைஷ்' எனுமிடத்தை- அடைந்தபோது, எ…

#3673

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூ…

#3674

அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் வீட்டில் அங்கத் தூய்மை செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே எனது இந்த நாள் (முழுவதும்) இர…

#3675

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகி யோரும் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்மீத…

#3676

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கும்போது என்னிடம் அபூபக்ரும் உமரும் வந்தார்கள். அபூபக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்தபின்) வாளியை எடுத்து ஒரு வ…

#3677

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சில மக்களிடையே நின்றுகொண்டிருக்க, அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்காக துஆ செய்தார்கள். -அப்போது உமர் (ரலி) அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள்…

#3678

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?” என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்…

#3679

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “நான் (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூதல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.40 அப்போது நான் மெல்லிய கா…

#3680

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் அங்கத் …

#3681

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப்) பாலை நான் (தாகம் தீருமளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண்- அல்லது, நகக்கண்க…

#3682

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி- அல்லது இரு வாள…

#3683

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி (…

#3684

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம். இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம…

#3685

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கலாயினர். அவரது ஜனாஸா (சடலம்) எடுக்கப்படு வதற்கு மு…

#3686

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முட னிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது …

#3687

அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:47 இப்னு உமர் (ரலி) அவர்கள் என்னிடம் உமர் (ரலி) அவர்களின் பண்புகள் சிலவற்றைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு அவற்றைத் தெரிவித்தேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூத…

#3688

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?” என்று (த…

#3689

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங் களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாய…

#3690

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அ…

#3691

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை), “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன.…

#3692

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்கள் வேதனையடையலானார்கள்.53 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப் போல, “நம்பிக்கையாளர்களின் தல…

#3693

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்காகத் திறவுங்கள்; அவருக்குச்…

#3694

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண் டிருக்க, நாங்கள் நபி (ஸல்) அவர் களுடன் இருந்தோம்...55 அத்தியாயம் :…

#3695

அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத் தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் நபி…

#3696

உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:59 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “உஸ்மான் (ரலி) அவர்களிடம் நீங்கள் அவர்களுடைய (தாய்வழ…

#3697

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது (அவர்களுடன்) நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்ம…

#3698

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் (சிறந்தவர்கள…

#3699

உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எகிப்துவாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தில் ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “…

#3700

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்குமுன் மதீனாவில் அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கும், உஸ்மான் பின…

#3701

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் அளிக்கப்போகிறேன். அவருடைய கரங்களில் அல்லாஹ் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னா…

#3702

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)…

#3703

அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் சஹ்ல் பின் சஅத் (ரó) அவர்களிடம் வந்து, “இன்னவர் - அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் பின் அல்ஹகம்) அலீ (ரலி) அவர்களைச் சொற்பொழிவு மேடைக்கருகில் (விரும்பத் தகா…

#3704

சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் நற்செயல்களை எடுத்துரைத்தார்கள். (பிறகு) அந்த …

#3705

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டுவரப்பட்டனர். அப்போது, ஃபாத்திமா (ரலி) அவர்கள்…

#3706

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “(நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர்-நபி) மூசா அவர்களிடம் எந்த இடம் இருந்ததோ அதே இடத்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவி…

#3707

அபீதா பின் அம்ர் அஸ்ஸல் மானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் (இராக் வந்திருந்தபோது இராக் அறிஞர்களிடம் “உம்முல் வலதை' விற்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க, அதை நான் விரும்பாதபோது), பின்வருமாறு கூறினார்கள்: நீங்…

#3708

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபிமொழிகளை) அதிகமாக அபூஹுரைரா அறிவிக்கிறாரே” என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எ…

#3709

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் பின் ஜஅஃப)ருக்கு சலாம் சொன்னால், “இரு சிறகுகள் உடைய வரின் மகனே! உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்' என்று சொல்வார்கள்.80 அபூ…

#3710

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களை (அல்லாஹ் விடம்) மழைகோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந…

#3712

…

#3713

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறா…

#3714

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார். இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.88 அத்தியாயம் :…

#3716

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார் கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டு…

#3717

மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: “சில்லு மூக்கு' நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில்93 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுக்கும் மூக்கில் கடுமையாகக் குருதி கொட்டும் நோய் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால் அது அவர்களை ஹஜ் ச…

#3718

மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “(உங்களுக்குப்பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “அவ்வாறு…

#3719

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்.95 இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96 அத்தியாயம் :…

#3720

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களின் வீட்டுப்) பெண்களி டையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப் பட்டோம். நான் அப்போது (என் தந்த…

#3721

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது,97 “நீங்கள் (கிழக்கு ரோமானிய இணைவைப்போர்மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து…

#3722

தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் (ரலி) அவர்களும் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் (இணைவைப் பாளர்களுடன்) போரிட்ட அந்த (உஹுத் போரின்) நாட்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.100 இதை, அறிவிப்பாளர் அபூஉஸ்ம…

#3724

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (உஹுத் போரின்போது) நபி (ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா (ரலி) அவர்களின் கையை (துளைகளும் வடுக்களும் நிற…

#3725

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(எனது வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (“என் தந்தையும் என் தா…

#3726

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக என்னை நான் கண்டேன்.102 அத்தியாயம் :…

#3727

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர். அந்நாளில்) தவிர (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தைத் தழுவிடவில்லை.103 நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு…

#3728

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் பாதையில் அம் பெய்த அரபியரில் நானே முதலாமவன் ஆவேன்.105 எங்களுக்கு மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ச…

#3729

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள், (ஃபாத்திமா இருக்கவே,) அபூஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண்பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடன…

#3730

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறைகூறினார்கள். அப்போது நபி (ஸல்) அ…

#3731

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, என்னிடம் (இருவரின் சாயலை வைத்து) உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் அப்போது ஒர…

#3732

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (திருட்டுக் குற்றத்தின் காரணமாக கை வெட்டும் தண்டனைக்கு உள்ளாக விருந்த) மக்ஸூமீ குலத்துப் பெண்ணொருத்தியின் விஷயம் குறைஷியரைக் கவலையில் ஆழ்த்தியது. அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி…

#3733

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், “அவள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படி பரிந்து) பேசுவது யார்?” என்று (தமக்குள்) விசாரித்துக்கொண…

#3734

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் பள்ளிவாசலில் இருந்தபொழுது பள்ளிவாசலின் ஒரு மூலையில் தமது ஆடையை (மண்ணில் புரளும்படி) இழுத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்…

#3735

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களா யிருந்த) என்னையும் ஹசன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப் பார்கள…

#3736

உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்மு அய்மனின் மகனான அய்மனின் மகன் ஹஜ்ஜாஜ் என்பவர் (பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தபோது) தம் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்யாமல…

#3737

உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் பின் அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தமது ர…

#3739

…

#3740

ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்” என்று சொன்னார்கள். இதைத் தம் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். அத்தியா…

#3742

அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு, “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு” என்று பிரார்த் தித்தேன்…

#3743

அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரு ரக்அத்கள் தொழு)ததும் “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித் தேன். பிறகு அ…

#3744

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக் குரியவர் அபூஉபைதா பின் அல்—ர்ராஹ் அவர்கள்தான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார…

#3745

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்” என்று சொன் னார்கள். அப்போது நபித்தோழர்…

#3746

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது (உரையாற்றியபடி) இருக்க ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்)அவர்களின் பக்கவாட்டில் அமர்ந்திருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களையும் மறுமுறை ஹசன்…

#3747

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களாயிருந்த) என்னையும் ஹசன் (ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, “இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக” என்று கூறினா…

#3748

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களுடைய மகன் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டபின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டுவரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் …

#3749

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!” என்று பிரார்த்திக்கக் …

#3750

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைச் சுமந்தபடி, “என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களைத்தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்க…

#3751

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.…

#3752

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹசன் பின் அலீ (ரலி) அவர்களை விட நபி (ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.133 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :…

#3753

அப்துர் ரஹ்மான் பின் அபீ நுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் கட்டியவரைக் குறித்து வினவினார். -அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் ஈயைக் கொல்வ…

#3754

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்” என்று சொல்வார்கள். அத்தியாயம் :…

#3755

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்களுக் காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனா விலேயே) வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்ன…

#3756

…

#3756

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, “இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத்தருவாயாக!” எனப் பிராத்தித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில…

#3757

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஸைத் (பின் ஹாரிஸா-ரலி) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதாலிப்-ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து…

#3758

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றியப் பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “அவர் எத்தகைய மனிதரென்…

#3760

…

#3761

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். அப்போது, “இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தேன். அப்போது முதியவர் ஒ…

#3762

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அழகிய தோற்றத்திலும் நடைமுறை யிலும் நபி (ஸல்) அவர்களை ஏறக் குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களி…

#3763

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம்.146 அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக…

#3764

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், தம்மிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப்பின் ஒரு ரக்அத் வித்ர் தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் (ரலி) அ…

#3765

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா (ரலி) அவர்கள் விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழ…

#3766

ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டி ருந்த நாங்கள், நபியவர்கள் தொழக் கண்டிராத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களை…

#3767

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா என்னில் ஒரு பகுதி யாவார். எனவே, அவருக்குக் கோப மூட்டியவர் எனக்குக் கோபமூட்டிய வராவார். இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.151 அத்தியாயம் :…

#3768

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள், “ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று சொன்னார்கள். நான், சலாமுக்குப் பதில் கூறும் முகமாக “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்…

#3769

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் அதிகமானோர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண் களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. (உலகின் மற்ற) பெண்…

#3770

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு, (மற்ற) உணவுகளைக் காட்டிலும் “ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். இதை அனஸ் பின் மாலிக் (ர…

#3771

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் நோயுற் றார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! வாய்மையில் முந்தியவர்களான அல்லாஹ்வின் தூதர்…

#3772

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் (தமக்கு ஆதரவாக “ஜமல்' போரில் கலந்துகொள்ளும்படி) மக்களை அழைப்பதற்காக அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹசன் (ரலி) அவர்களையும் “கூஃபா' நகரு…

#3773

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிட மிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனுல் முஸ்தலிக் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது…

#3774

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தபோது தம் துணைவியரிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள்.…

#3775

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூ…