அரபு உரை
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ يَسْأَلُهُ عَنِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ". فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ ". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَصِيَامُ رَمَضَانَ ". قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ ". قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ. قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ ". فَأَدْبَرَ الرَّجُلُ وَهْوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفْلَحَ إِنْ صَدَقَ ".
மொழிபெயர்ப்பு
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பகலிலும் இரவி லும் ஐந்து தொழுகைகள் (இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாகும்)” என்று பதில் கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர (வேறு தொழுகை) ஏதும் என்மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மேலும், ‘‘ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் ‘‘இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். ‘‘இல்லை; நீயாக விரும்பிச் செலுத்தும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குமேல் நான் அதிகமாகச் செய்யவும்மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும்மாட்டேன்” என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :