அரபு உரை
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهْوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ ـ أَوْ زَمْزَمَةٌ ـ فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادِ أَىْ صَافِ، هَذَا مُحَمَّدٌ. فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ".
மொழிபெயர்ப்பு
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் (குழப்பவாதியான யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பே, அவனிடமிருந்து எதையேனும் கேட்டுவிட வேண்டும் எனத் திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக் குள் (குறிகாரர்கள் முணுமுணுப்பதைப் போல்) எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்து விட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)” என்று கூறிவிட்டாள். உடனே இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்) விட்டு விட்டிருந்தால், (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்திவிட்டிருப்பான்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :