அரபு உரை
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ عَبْدَ بْنَ زَمْعَةَ، وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ أَوْصَانِي أَخِي إِذَا قَدِمْتُ أَنْ أَنْظُرَ ابْنَ أَمَةِ زَمْعَةَ فَأَقْبِضَهُ، فَإِنَّهُ ابْنِي. وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي. فَرَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم شَبَهًا بَيِّنًا فَقَالَ " هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ ".
மொழிபெயர்ப்பு
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களி டம் வழக்கொன்றைக் கொண்டுவந்தனர். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரர் (உத்பா பின் அபீவக்காஸ்), ‘நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்’ என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்” என்று சொன்னார்கள். அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் அதிகாரத்தில் அவள் இருந்தபோது பிறந்தவர்” என்று கூறினார்.5 அந்த அடிமைப் பெண்ணின் மகனி டம் (சஅதுடைய சகோதரர் உத்பாவின்) சாயலைத் தெளிவாகக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.6 பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக்கொள்.)” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :