Sahih al-Bukhari தொகுதி 1 தகராறுகள் ஹதீஸ் 2418

அரபு உரை

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا، حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى ‏"‏ يَا كَعْبُ ‏"‏‏.‏ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا ‏"‏‏.‏ فَأَوْمَأَ إِلَيْهِ، أَىِ الشَّطْرَ‏.‏ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَاقْضِهِ ‏"‏‏.‏

மொழிபெயர்ப்பு

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம் பள்ளிவாசலில் வைத்து, நான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். எங்கள் (இருவரி டையே இது தொடர்பாக வாக்குவாதம் தொடங்கி) இருவரின் குரலும் உயர்ந்து விட்டது. வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைச் செவியுற்றுவிட்டார்கள். பிறகு தமது அறையின் திரையை நீக்கி எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டு வந்து, யிகஅபே!› என்று அழைத்தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து குறைத்துக் கொள்” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக்கொள்ளும்படி (விரலால்) சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘எழுந்து சென்று (மீதிக்) கடனை அடைப்பீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :

This hadith is from Sahih al-Bukhari, one of the two most rigorously authenticated collections in Islamic scholarship. Content is provided without editorial opinion or commentary.
Link copied to clipboard!