அரபு உரை
حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بِيْرُ حَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ فَلَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بِيْرُ حَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ شِئْتَ، فَقَالَ " بَخٍ، ذَلِكَ مَالٌ رَائِحٌ، ذَلِكَ مَالٌ رَائِحٌ. قَدْ سَمِعْتُ مَا قُلْتَ فِيهَا، وَأَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ ". قَالَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. تَابَعَهُ إِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ. وَقَالَ رَوْحٌ عَنْ مَالِكٍ رَابِحٌ.
மொழிபெயர்ப்பு
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே செல்வராக இருந்தார்கள். அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு சென்று, அங்குள்ள சுவைநீரை அருந்துவது வழக்கம். இந்நிலையில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் தனது வேதத்தில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒரு போதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” என்று கூறுகின்றான். என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ எனும் இந்தத் தோட்டமேயாகும். (இனிமேல்,) இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பிய விதத்தில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது தொடர்பாக நீர் கூறியதை நான் செவியுற்றேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாக) கருதுகிறேன்” என்றார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (நன்மை கிடைத்துவிட்ட லிறராயிஹ்’ என்பதற்குப் பதிலாக) ‘இலாபம் தரும்’ (ராபிஹ்) என இடம்பெற்றுள்ளது.8 அத்தியாயம் :