அரபு உரை
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ " أَعْطُوهُ ". فَطَلَبُوا سِنَّهُ فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا. فَقَالَ " أَعْطُوهُ ". فَقَالَ أَوْفَيْتَنِي أَوْفَى اللَّهُ بِكَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً ".
மொழிபெயர்ப்பு
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, (தாம் கடனாக வாங்கியிருந்த) குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘‘அவருக்கு அதைக் கொடுத்துவிடுங்கள்” என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடியபோது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள். ‘‘அதை அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள்; அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.5 அத்தியாயம் :