Sahih al-Bukhari தொகுதி 1 பிரதிநிதித்துவம் ஹதீஸ் 2304

அரபு உரை

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ الْمُعْتَمِرَ، أَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَتْ لَهُمْ غَنَمٌ تَرْعَى بِسَلْعٍ، فَأَبْصَرَتْ جَارِيَةٌ لَنَا بِشَاةٍ مِنْ غَنَمِنَا مَوْتًا، فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا بِهِ، فَقَالَ لَهُمْ لاَ تَأْكُلُوا حَتَّى أَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم، أَوْ أُرْسِلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَنْ يَسْأَلُهُ‏.‏ وَأَنَّهُ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ذَاكَ، أَوْ أَرْسَلَ، فَأَمَرَهُ بِأَكْلِهَا‏.‏ قَالَ عُبَيْدُ اللَّهِ فَيُعْجِبُنِي أَنَّهَا أَمَةٌ، وَأَنَّهَا ذَبَحَتْ‏.‏ تَابَعَهُ عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ‏.‏

மொழிபெயர்ப்பு

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களுக்குச் சில ஆடுகள் இருந்தன. அவை ‘சல்உ’ எனும் மலைப் பகுதியில் மேய்ந்துவந்தன. (ஒருநாள்) அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தறுவாயில் இருப்பதை எங்கள் அடிமைப் பெண் ஒருத்தி பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதைக் கொண்டு அந்த ஆட்டை அறுத்தாள். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்!” என்று என்னுடன் இருந்தவர்களுக்கு நான் கூறினேன். அல்லது ‘நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்’ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை உண்ணுமாறு கூறினார்கள். ‘‘அவரோ ஓர் அடிமைப்பெண்; அவரே இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

This hadith is from Sahih al-Bukhari, one of the two most rigorously authenticated collections in Islamic scholarship. Content is provided without editorial opinion or commentary.
Link copied to clipboard!