அரபு உரை
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي، هُرَيْرَةَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعْمَلَ رَجُلاً عَلَى خَيْبَرَ، فَجَاءَهُمْ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ " أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا ". فَقَالَ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ، وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ. فَقَالَ " لاَ تَفْعَلْ، بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا ". وَقَالَ فِي الْمِيزَانِ مِثْلَ ذَلِكَ.
மொழிபெயர்ப்பு
அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் பகுதிக்கு ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (அங்கு சென்றுவிட்டு) உயர் ரகப் பேரீச்சம் பழங்களை மக்களிடம் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இப்படித்தான் (உயர்ரக மானவையாக) இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘இரண்டு ‘ஸாஉ’கள் சாதாரண வகைப் பேரீச்சம்பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ‘ஸாஉ’வையும், மூன்று ‘ஸாஉ’கள் சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ‘ஸாஉ’களையும் நாங்கள் வாங்குவோம்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதீர்! சாதாரண வகைப் பேரீச்சம்பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு, அந்தக் காசுகளுக்குப் பதிலாக உயர்ந்த பேரீச்சம்பழங்களை வாங்குவீராக!” என்றார்கள். நிறுத்தலளவையிலும் இதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.4 அத்தியாயம் :