Sahih al-Bukhari தொகுதி 1 அறிவு ஹதீஸ் 86

அரபு உரை

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ وَهِيَ تُصَلِّي فَقُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ إِلَى السَّمَاءِ، فَإِذَا النَّاسُ قِيَامٌ، فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ‏.‏ قُلْتُ آيَةٌ فَأَشَارَتْ بِرَأْسِهَا، أَىْ نَعَمْ، فَقُمْتُ حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ، فَجَعَلْتُ أَصُبُّ عَلَى رَأْسِي الْمَاءَ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ ‏ "‏ مَا مِنْ شَىْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلاَّ رَأَيْتُهُ فِي مَقَامِي حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ، فَأُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ، مِثْلَ ـ أَوْ قَرِيبًا لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، يُقَالُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُوقِنُ لاَ أَدْرِي بِأَيِّهِمَا قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى، فَأَجَبْنَا وَاتَّبَعْنَا، هُوَ مُحَمَّدٌ‏.‏ ثَلاَثًا، فَيُقَالُ نَمْ صَالِحًا، قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُوقِنًا بِهِ، وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوِ الْمُرْتَابُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ ‏"‏‏.‏

மொழிபெயர்ப்பு

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூரிய கிரகணம் ஏற்பட்டபோது,) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி(த் தமது கையால்) சைகை செய்தார்கள். அப்போது மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். எனவே, ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று ஆயிஷா கூறினார்கள். அப்போது “(இது மக்களைப் பாதிக்கும்) ஏதேனும் அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலைமீது தண்ணீரை ஊற்றலானேன். (தொழுகை முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும், எனக்கு (பின்வருமாறு) இறைவனிடமிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில் பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்க மான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள். அப்போது (கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்), “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப் படும். அப்போது ‘இறைநம்பிக்கையாளர்’ அல்லது ‘உறுதி கொண்டவர்’ “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியை யும் கொண்டுவந்தார்கள்; நாங்கள் (அவர்களது அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தான்” என்று மும்முறை கூறுவார். அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்து), “பயன் பெற்றவராக நீர் (நிம்மதியோடு) உறங்குவீராக!” என்றும் “நிச்சயமாக நீர் (இறைத்தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாங்கள் அறிந்திருந்தோம்” என்றும் கூறப்படும். ‘நயவஞ்சகனோ’ அல்லது ‘சந்தேகப்பேர்வழியோ’, “எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் (அவரைப் பற்றி) ஏதோ சொல்லக் கேட்டேன். எனவே, நானும் அது போன்று கூறினேன்” என்பான். -அறிவிப்பாளர் ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘நிகரான’ அல்லது ‘நெருக்கமான’ ஆகிய) இவற்றில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வாறே, (இறை நம்பிக்கையாளர் அல்லது உறுதி கொண்டவர் ஆகிய) இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. மேலும், (நயவஞ்சகன் அல்லது சந்தேகப்பேர்வழி ஆகிய) இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :

This hadith is from Sahih al-Bukhari, one of the two most rigorously authenticated collections in Islamic scholarship. Content is provided without editorial opinion or commentary.
Link copied to clipboard!