Sahih al-Bukhari தொகுதி 1 அறிவு ஹதீஸ் 79

அரபு உரை

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا، فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ، فَأَنْبَتَتِ الْكَلأَ وَالْعُشْبَ الْكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ الْمَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً، وَلاَ تُنْبِتُ كَلأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقِهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ، فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا، وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْحَاقُ وَكَانَ مِنْهَا طَائِفَةٌ قَيَّلَتِ الْمَاءَ‏.‏ قَاعٌ يَعْلُوهُ الْمَاءُ، وَالصَّفْصَفُ الْمُسْتَوِي مِنَ الأَرْضِ‏.‏

மொழிபெயர்ப்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு அருளியுள்ள நல்வழி மற்றும் கல்விக்கு உதாரணமா கிறது, ஒரு நிலத்தில் பெய்த பெருமழை போன்றதாகும். அந்த நிலத்தில் நல்ல பகுதியும் உண்டு. அது நீரை உள்வாங்கிக் கொண்டது; அதில் புல்லும் அதிகமான பச்சைச் செடிகொடிகளும் முளைத்தன. அந்த நிலத்தில் தரிசும் உண்டு. அது நீரை (உள்வாங்காமல்) தேக்கிவைத்துக் கொண்டது. அதை இறைவன் மக்களுக் குப் பயன்படச்செய்தான். மக்கள் அருந் தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் பெய்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை; அதில் புற்பூண்டுகளை முளைக்கவுமில்லை. இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் எனக்கு அருளியதன் மூலம் பயனடைந்து, தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பித்தவருக்கு உதாரணமாகும்; அவ்வாறே, அல்லாஹ் எனக்கு அருளியதை ஏறிட்டுப் பார்க்காமலும், எனக்கு அருளப்பெற்ற அல்லாஹ்வின் நல் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிற வனுக்கும் உவமையாகும்.17 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவற்றில் இன்னும் சில நிலங்களும் உள்ளன. அவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன” என்று இடம்பெற்றுள்ளது. (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ‘கீஆன்’ என்பதன் பன்மை ‘காஉ’ என்பதாகும்.) ‘காஉ’ என்பதற்கு ‘தண்ணீர் தேங்காத பூமி’ என்பது பொருள். ‘ஸஃப் ஸஃப்’ என்பதற்கு ‘சம நிலம்’ என்பது பொருள். அத்தியாயம் :

This hadith is from Sahih al-Bukhari, one of the two most rigorously authenticated collections in Islamic scholarship. Content is provided without editorial opinion or commentary.
Link copied to clipboard!