Sahih al-Bukhari தொகுதி 1 அறிவு ஹதீஸ் 118

அரபு உரை

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِنَّ النَّاسَ يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، وَلَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُ حَدِيثًا، ثُمَّ يَتْلُو ‏{‏إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏الرَّحِيمُ‏}‏ إِنَّ إِخْوَانَنَا مِنَ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وِإِنَّ إِخْوَانَنَا مِنَ الأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمُ الْعَمَلُ فِي أَمْوَالِهِمْ، وَإِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِشِبَعِ بَطْنِهِ وَيَحْضُرُ مَا لاَ يَحْضُرُونَ، وَيَحْفَظُ مَا لاَ يَحْفَظُونَ‏.‏

மொழிபெயர்ப்பு

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அபூஹுரைரா அதிகமாக நபிமொழி களை அறிவிக்கிறார்” என்று மக்கள் (குறையாகக்) கூறுகிறார்கள். அல்லாஹ் வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையாயின், நான் ஒரு நபி மொழியைக்கூட அறிவித்திருக்கமாட் டேன். அந்த வசனங்கள் வருமாறு: நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகு அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர். எனினும், பாவத்திலிருந்து மீண்டு, (தம்மைச்) சீர்திருத்தி, (தாம் மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிகவும் மன்னிப்பவனும் பெருங்கருணை யாளனும் ஆவேன். (2:159,160) நம் முஹாஜிர் (மக்கா) சகோதரர்களின் கவனத்தை, கடைவீதிகளில் அவர்கள் செய்துவந்த வியாபாரம் ஈர்த்துக்கொண்டது. நம் அன்சாரி (மதீனா) சகோதரர்களின் கவனத்தை, அவர்களின் (விளைநிலம் போன்ற) செல்வங்களைப் பராமரிக்கும் பணி ஈர்த்துக்கொண்டது. ஆனால், (இந்த) அபூஹுரைராவோ வயிறு நிரம்பினால் போதுமென்ற திருப்தி யுடன் (வேறு அலுவல்களில் கவனம் செலுத்தாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே ஒட்டிக்கொண்டி ருந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மற்றவர்கள் ஆஜராகாத இடங்களிலெல்லாம் நான் ஆஜராகி விடுவேன்; மற்றவர்கள் மனனம் செய்யாத வற்றையெல்லாம் நான் மனனம் செய்து கொண்டிருந்தேன். அத்தியாயம் :

This hadith is from Sahih al-Bukhari, one of the two most rigorously authenticated collections in Islamic scholarship. Content is provided without editorial opinion or commentary.
Link copied to clipboard!